கேரளாவில் இன்று தான் அதிகபட்ச கொரோனா பாதிப்பு: முதல்வர் தகவல்

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி கேரளாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டார். அதன்பின் கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது ஆனால் கேரளாவில் முதல்வர் பினரயி விஜயன் தலைமையிலான அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக படிப்படியாக கொரோனா நோயாளிகள் குறைந்து குணமாகி வந்தனர். ஒரு கட்டத்தில் கேரளா கொரோனா நோயாளியே இல்லாத மாநிலமாக மாறி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
 

கேரளாவில் இன்று தான் அதிகபட்ச கொரோனா பாதிப்பு: முதல்வர் தகவல்

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி கேரளாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டார். அதன்பின் கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது

ஆனால் கேரளாவில் முதல்வர் பினரயி விஜயன் தலைமையிலான அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக படிப்படியாக கொரோனா நோயாளிகள் குறைந்து குணமாகி வந்தனர். ஒரு கட்டத்தில் கேரளா கொரோனா நோயாளியே இல்லாத மாநிலமாக மாறி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது

ஆனால் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. கடந்த சில நாட்களாக தினமும் 100 க்கும் மேலானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 152 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் பினாரயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார்

இன்றுதான் கேரளாவில் அதிக பட்சமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது 3,603 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாகவும் கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்

இருப்பினும் தமிழகத்தை ஒப்பிடும்போது கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது

From around the web