சென்னை கொரோனா நிலவரம்: 10 ஆயிரத்தை நெருங்கும் 6 மண்டலங்கள்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தாலும் குறிப்பாக ஆறு மண்டலங்களில் மட்டும் கட்டுப்படுத்த முடியாத அளவில் கொரோனாவின் பாதிப்பு உள்ளது ராயபுரம் மண்டலத்தில் 2000ஐ கடந்தும், கோடம்பாக்கம், திருவிக நகர், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை மற்றும் அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் ஆயிரத்தை கடந்தும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். சென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறித்த தகவலை சென்னை மாநகராட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இதன்படி ராயபுரம் மண்டலத்தில் 2324
 
சென்னை கொரோனா நிலவரம்: 10 ஆயிரத்தை நெருங்கும் 6 மண்டலங்கள்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தாலும் குறிப்பாக ஆறு மண்டலங்களில் மட்டும் கட்டுப்படுத்த முடியாத அளவில் கொரோனாவின் பாதிப்பு உள்ளது

ராயபுரம் மண்டலத்தில் 2000ஐ கடந்தும், கோடம்பாக்கம், திருவிக நகர், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை மற்றும் அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் ஆயிரத்தை கடந்தும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்.

சென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறித்த தகவலை சென்னை மாநகராட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இதன்படி ராயபுரம் மண்டலத்தில் 2324 பேர்களும், கோடம்பாகத்தில் 1646 பேர்களும், திருவிக நகரில் 1393 பேர்களும், தேனாம்பேட்டையில் 1412 பேர்களும், தண்டையார்பேட்டையில் 1322 பேர்களும் அண்ணாநகரில் 1089 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வளசரவாக்கம் மண்டலத்தில்794 பேர்களும், அடையாறு மண்டலத்தில் 719 பேர்களும், அம்பத்தூரில் 516 பேர்களும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

From around the web