குவியும் பாராட்டு; தமிழகம் மற்றும் கேரளாவுக்கு!"மாநில அரசு மகிழ்ச்சி"

ஆக்சிசன் கையாள்வதில் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் மத்திய அரசு வழக்கறிஞர்!
 
குவியும் பாராட்டு; தமிழகம் மற்றும் கேரளாவுக்கு!"மாநில அரசு மகிழ்ச்சி"

தற்போது நாடெங்கும் மிகுந்த அச்சமான சூழ்நிலை நிலவுகிறது. காரணம் என்றால் நாட்டில் தற்போது ஆட்கொல்லி நோய் தாக்கம் அதிகமாக தலைவிரித்தாடுகிறது. மேலும் பல பகுதிகளில் கொரோனா நோய்க்கு எதிராக உயிர் இழப்புகள் அதிகமாக நிலவுகிறது. இதனால் நாட்டு மக்கள் கடந்த ஆண்டே போல் மீண்டும் அச்சத்தில் உள்ளனர். மேலும் மத்திய அரசின் சார்பில் பல்வேறு மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிகள்அனுப்பி வைக்கப்படுகின்றன. கொரோனா  நோய்க்கான தடுப்பூசிகள்பல மாநிலங்களில் பற்றாக்குறையாக காணப்படுகிறது.superme court

மேலும் இந்த தடுப்பூசிகள் மட்டுமின்றி கொரோனா  நோயாளிகளுக்கு சிகிச்சையின்போது அளிக்கப்படும் ஆக்ஸிஜன் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் ஆக்சிசன் பற்றாக்குறையினாலும் உயிரிழப்புகள் அதிகம் நிலவுகிறது. இந்நிலையில் தற்போது இந்த ஆக்சிசனை பல மாநில அரசுகள் அதிகமாக உற்பத்தி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் வாதம் நிகழ்ந்தது.

அதில் மத்திய அரசு வழக்கறிஞர் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அதன்படி தமிழ்நாடும் கேரளாவும் ஆக்சிசனை சிறப்பாக கையாள்வதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் கருத்து கூறியுள்ளார்.மேலும் மற்ற மாநிலங்கள் இந்த ஆக்சிசன் கையாளுவதில் சிக்கலை சந்தித்து வருகின்றன என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கூறியுள்ளார். இதனால் தமிழகம் மற்றும் கேரளாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என்றும் அதற்கான முன்னேற்பாடுகள் மிகவும் தரமானதாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

From around the web