முதல்வர் தலைமையில் திடீரென கூடிய அமைச்சரவை கூட்டம்: என்ஆர்பிக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவா?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தற்போது அமைச்சரவை கூட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் முதல்வருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர் இந்த கூட்டத்தில் சமீபத்தில் முதல்வரால் அறிவிக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்புக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டால் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மிகப் பெரிய பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல் என்.பி.ஆர், என்.ஆர்.சி சட்டத்தில் சில அம்சங்களை நீக்குவது குறித்து மத்திய அரசுடன்
 
முதல்வர் தலைமையில் திடீரென கூடிய அமைச்சரவை கூட்டம்: என்ஆர்பிக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவா?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தற்போது அமைச்சரவை கூட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் முதல்வருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்

இந்த கூட்டத்தில் சமீபத்தில் முதல்வரால் அறிவிக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்புக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டால் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மிகப் பெரிய பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் என்.பி.ஆர், என்.ஆர்.சி சட்டத்தில் சில அம்சங்களை நீக்குவது குறித்து மத்திய அரசுடன் வலியுறுத்த அமைச்சரவை அமைச்சர்கள் வலியுறுத்தி என்றும் இதற்கான ஆலோசனை இன்று இன்றைய அமைச்சரவையில் நடைபெற வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் சிஏஏ சட்டத்திலும் சில நிபந்தனைகளை விதிக்க அமைச்சரவையில் ஆலோசிக்கும் என்று கூறப்படுகிறது

தமிழகத்தில் கடந்த 6 நாட்களாக சிஏஏ சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக இதுகுறித்த அறிவிப்புகள் ஏதேனும் இன்றைய அமைச்சரவையில் கூட்டத்தில் இருக்கலாம் என கருதப்படுகிறது இந்த நிலையில் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இன்னும் சற்று நேரத்தில் பத்திரிகையாளர்களுக்கும் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web