தமிழக மின் துறை அமைச்சருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பாமர மக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் கொரோனா தோற்று பாதிக்கப்பட்டு இருப்பது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளடு. மின்துறை அமைச்சர் தங்கமணி அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா அறிகுறி
 
தமிழக மின் துறை அமைச்சருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பாமர மக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் கொரோனா தோற்று பாதிக்கப்பட்டு இருப்பது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளடு. மின்துறை அமைச்சர் தங்கமணி அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்த போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இதனால் அவர் தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது நாமக்கல் அலுவலகம் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் தங்கமணி கொரோனா காரணமாக இன்று நடைபெற இருக்கும் மத்திய எரிசக்தித்துறை இணை அமைச்சர் சந்திப்பில் அவர் கலந்து கொள்ளவில்லை என்பதும் முதலமைச்சர் மட்டுமே இதில் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web