வாட்ஸ் அப் காலில் பேச முருகன், நளினி கேட்ட அனுமதி: தமிழக அரசின் அதிரடி முடிவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து நளினி மற்றும் முருகன் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நளினி, முருகன் ஆகிய இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச அனுமதிக்க வேண்டும் என்றும், அதேபோல் லண்டனில் உள்ள முருகனின் தங்கையுடன் முருகனை பேச அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் தமிழக அரசு
 
வாட்ஸ் அப் காலில் பேச முருகன், நளினி கேட்ட அனுமதி: தமிழக அரசின் அதிரடி முடிவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து நளினி மற்றும் முருகன் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நளினி, முருகன் ஆகிய இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச அனுமதிக்க வேண்டும் என்றும், அதேபோல் லண்டனில் உள்ள முருகனின் தங்கையுடன் முருகனை பேச அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் தமிழக அரசு வழக்கறிஞரிடம், ‘’வாட்ஸ்அப் காலில் பேசுவதற்கு அனுமதிப்பதில் என்ன பிரச்சினை உள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஒரு வாரத்தில் பதில் கூறுவதாக தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது வெளிநாடு வாழ் உறவினர்களிடம் வாட்ஸ் அப் மூலம் நளினி, முருகன் ஆகிய இருவரையும் பேச அனுமதிக்க முடியாது என்றும், இந்தியாவுக்குள் மட்டும் பேச அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது

From around the web