தமிழக அரசு எடுத்த சிக்கன நடவடிக்கைகள்: அதிர்ச்சியில் அரசு அதிகாரிகள்

கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை காப்பாற்ற கோடிக்கணக்கில் செலவு செய்து வரும் தமிழக அரசு அதனை ஈடுகட்ட ஒருசில சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளதால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ள சிக்கன நடவடிக்கைகள் இதோ: அரசு உயரதிகாரிகள் உயர்வகுப்பு விமான பயணத்திற்கு இனி அனுமதி இல்லை சால்வைகள் பூங்கொத்துகள் வழங்குவதற்கான செலவுகள் அறவே தவிர்க்கப்பட வேண்டும் மேஜை நாற்காலிகள் உள்ளிட்ட அலுவலக தேவைகளை வாங்குவதை 50% குறைக்கப்பட வேண்டும் அரசு செலவில் செய்யப்படும் விருந்து
 

தமிழக அரசு எடுத்த சிக்கன நடவடிக்கைகள்: அதிர்ச்சியில் அரசு அதிகாரிகள்

கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை காப்பாற்ற கோடிக்கணக்கில் செலவு செய்து வரும் தமிழக அரசு அதனை ஈடுகட்ட ஒருசில சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளதால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக அரசு அறிவித்துள்ள சிக்கன நடவடிக்கைகள் இதோ:

அரசு உயரதிகாரிகள் உயர்வகுப்பு விமான பயணத்திற்கு இனி அனுமதி இல்லை

சால்வைகள் பூங்கொத்துகள் வழங்குவதற்கான செலவுகள் அறவே தவிர்க்கப்பட வேண்டும்

மேஜை நாற்காலிகள் உள்ளிட்ட அலுவலக தேவைகளை வாங்குவதை 50% குறைக்கப்பட வேண்டும்

அரசு செலவில் செய்யப்படும் விருந்து நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது

விளம்பர செலவுகளை 25% குறைத்துக்கொள்ளவும் அரசு துறைகளுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் அரசு செலவில் வெளிநாட்டு பயணம் செய்யவும் தடை

From around the web