10 ஆம் வகுப்பு தேர்வை நடத்த இதுவே சரியான தருணம்: அரசு தரப்பு வாதம்

விஞ்ஞானிகள் அறிக்கைப்படி எதிர்வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டும் என்றும், எனவே 10 ஆம் வகுப்பு தேர்வை நடத்த இதுவே சரியான தருணம் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம் செய்து வருகிறது. மேலும் இந்தியாவில் 11 மாநிலங்கள் தேர்வை நடத்தி முடித்துவிட்டன என்றும், மாணவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், இனி வரும் நாட்களில் கொரோனா தொற்று பரவல் அதிகமாகும் என்றும், பின்னாளில் தேர்வு நடத்துவது ஆபத்தானதாக இருக்கும் என்றும்
 
10 ஆம் வகுப்பு தேர்வை நடத்த இதுவே சரியான தருணம்: அரசு தரப்பு வாதம்

விஞ்ஞானிகள் அறிக்கைப்படி எதிர்வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டும் என்றும், எனவே 10 ஆம் வகுப்பு தேர்வை நடத்த இதுவே சரியான தருணம் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம் செய்து வருகிறது.

மேலும் இந்தியாவில் 11 மாநிலங்கள் தேர்வை நடத்தி முடித்துவிட்டன என்றும், மாணவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், இனி வரும் நாட்களில் கொரோனா தொற்று பரவல் அதிகமாகும் என்றும், பின்னாளில் தேர்வு நடத்துவது ஆபத்தானதாக இருக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்து வருகிறது.

முன்னதாக மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு என்றும், மாணவர் உயிரிழந்தால் இழப்பீடு வழங்குவதை தவிர வேறு என்ன உத்தரவாதம்? என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்னும் சில நிமிடங்களில் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web