தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்ட தமிழக கவர்னர்: என்ன காரணம்?

தமிழகத்தில் ஏற்கனவே அமைச்சர்கள் உள்பட 21 எம்எல்ஏக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் அவர்களில் ஒரு சிலர் மட்டும் குணமாகி வீடு திரும்பியுள்ளார் என்பது தெரிந்ததே அதிமுக திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது திடீரென தமிழக ஆளுனரும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கவர்னரின் ராஜ்பவன் மாளிகையில் பணி செய்து கொண்டிருந்த ஊழியர்களில் 3 பேருக்கும்
 

தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்ட தமிழக கவர்னர்: என்ன காரணம்?

தமிழகத்தில் ஏற்கனவே அமைச்சர்கள் உள்பட 21 எம்எல்ஏக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் அவர்களில் ஒரு சிலர் மட்டும் குணமாகி வீடு திரும்பியுள்ளார் என்பது தெரிந்ததே

அதிமுக திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது திடீரென தமிழக ஆளுனரும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கவர்னரின் ராஜ்பவன் மாளிகையில் பணி செய்து கொண்டிருந்த ஊழியர்களில் 3 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் இதனை அடுத்தே ஆளுநர் மாளிகையில் உள்ள மற்ற ஊழியர்களும் தங்களை தாங்களே தனிமைப்படுத்தும் கொண்டதாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களும் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இருப்பினும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

From around the web