தமிழகம் முழுவதும் போராட்டங்கள் எதிரொலி: டெல்லி சென்றார் கவர்னர்

தமிழகத்தில் தற்போது பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட்டம், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தும் போராட்டம், தேனி நியூட்ரியானோ திட்டத்தை எதிர்த்து போராட்டம், சுங்கச்சாவடி கட்டணத்தை எதிர்த்து போராட்டம், நெடுவாசல் போராட்டம், திரையுலகினர் போராட்டம், என எங்கு பார்த்தாலும் போராட்டமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகமே போராட்ட களமாக மாறியுள்ள சூழலில், தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி ஆகியோருடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில்,
 

தமிழகத்தில் தற்போது பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட்டம், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தும் போராட்டம், தேனி நியூட்ரியானோ திட்டத்தை எதிர்த்து போராட்டம், சுங்கச்சாவடி கட்டணத்தை எதிர்த்து போராட்டம், நெடுவாசல் போராட்டம், திரையுலகினர் போராட்டம், என எங்கு பார்த்தாலும் போராட்டமாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகமே போராட்ட களமாக மாறியுள்ள சூழலில், தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி ஆகியோருடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், நேற்றிரவு 7.10 விமானத்தில் கவர்னர் புரோகித் டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்கு தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்கள் குறித்து மத்திய அரசிடம் கவர்னர் அறிக்கை அளிப்பார் என கூறப்படுகிறது.

From around the web