1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பாஸ்: முதல்வர் ஈபிஎஸ் அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பீதி காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே இந்த நிலையில் வழக்கமாக ஏப்ரல் மாதம் நடைபெறும் முழு ஆண்டு தேர்வு இந்த ஆண்டு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதனை கருத்தில் கொண்டும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் பாஸ் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார் அதுமட்டுமன்றி நேற்று நடந்த பிளஸ் டூ தேர்வில்
 
1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பாஸ்: முதல்வர் ஈபிஎஸ் அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பீதி காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் வழக்கமாக ஏப்ரல் மாதம் நடைபெறும் முழு ஆண்டு தேர்வு இந்த ஆண்டு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

இதனை கருத்தில் கொண்டும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் பாஸ் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார்

அதுமட்டுமன்றி நேற்று நடந்த பிளஸ் டூ தேர்வில் ஒரு சில மாணவர்களால் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த மாணவர்களுக்கு மறு தேர்வு வைக்கப்படும் என்றும் அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். இது அனைத்து மாணவர்களையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

From around the web