முடிவுக்கு வருகிறதா ஊரடங்கு? முதல்வர் முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது இந்த நிலையில் 7 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இன்னும் இரண்டு நாட்களில் ஊரடங்கு முடிய உள்ளதால் ஊரடங்கை நீடிப்பதா? அல்லது முழுவதுமாக தளர்வுகள் அறிவிப்பதா? என்பது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை
 

முடிவுக்கு வருகிறதா ஊரடங்கு? முதல்வர் முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது

இந்த நிலையில் 7 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இன்னும் இரண்டு நாட்களில் ஊரடங்கு முடிய உள்ளதால் ஊரடங்கை நீடிப்பதா? அல்லது முழுவதுமாக தளர்வுகள் அறிவிப்பதா? என்பது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார்

ளை மறுநாளுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் முதல்வரின் இந்த ஆலோசனை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆலோசனையில் கடந்த 5 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள பொது போக்குவரத்து தொடங்குவது தொடர்பாகவும் அவர் ஆட்சியரிடம் கருத்து கேட்கிறார். மேலும் மாவட்டம் மற்றும் மண்டலங்களுக்குள் பொது போக்குவரத்து அனுமதி வழங்க வாய்ப்பு இருப்பதாக தலைமைசெயலக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன

தமிழகத்தில் இபாஸ் நடைமுறை இன்னும் ரத்து செய்யாமல் இருக்கும் நிலையில் இபாஸ் முறையை ரத்து செய்யலாமா? என்பது குறித்தும், ஒவ்வொரு ஞாயிறும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை ரத்து செய்யலாமா? என்பது குறித்தும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்தவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து ஒரு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web