தேமுதிக சோகம்!மற்றுமொரு தேமுதிக உறுப்பினருக்கு கொரோனா!

சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் கொரோனா உறுதியானது!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதால் தமிழகத்தில் வேலைப்பாடுகள் மிகவும் மும்முரமாக உள்ளது. இதில் பல கட்சிகளுடன் பல்வேறு கட்சி கூட்டணி வைத்துள்ளனர்.  பல கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலிலும் தங்களது தேர்தல் அறிக்கையும் வெளியிடுவது அதன்படி அதிமுகவின் தரப்பில் எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் போட்டியிட உள்ளதாகவும், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போடி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அதிமுக தரப்பில்தகவல் வெளியானது.

corona

மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் பல பகுதிகளில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறார். மேலும் தேமுதிக, அதிமுக கூட்டணியில் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் தேமுதிக  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இணைந்தது. அதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆனது தேமுதிகவிற்கு 60 தொகுதிகளை வழங்கியது.இந்நிலையில் சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்றானது மிகவும் அதிகரித்து வருகிறது.

மேலும் தேமுதிகவின் துணை செயலாளராக இருக்கும் உள்ள எல்கே சுஜித்துக்கு கொரோனா உறுதியானது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  மற்றுமொரு தேமுதிக வேட்பாளர் கொரோனா  உறுதியானது.சேலம் மேற்கு தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட உள்ளதாகவும் தேமுதிக கட்சி நிர்வாகம் அறிவித்தது .அந்த வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ். தற்போது அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

From around the web