நடந்து சென்று வாக்கு சேகரித்த தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த்!

விருத்தாச்சலம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்!
 
நடந்து சென்று வாக்கு சேகரித்த தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதி உள்ளன. தமிழகத்தில் ஆளும் கட்சியுடன் கூட்டணியாக பாஜக மற்றும் பாமக கட்சிகளை வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. இந்நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று அழைக்கப்படும் தேமுதிகவும் அதிமுக கூட்டணியில் இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது.

tmdk

பின்னர் விலகிய சில தினங்களிலேயே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று அழைக்கப்படும் அமமுக கட்சியில் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. அதற்காக அமமுக தரப்பிலிருந்து தேமுதிகவிற்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

இந்நிலையில் அவர் தற்போது காலையில்  தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். மேலும் அவர் கால்நடையாக சென்று அங்குள்ள கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக அவர் அங்குள்ள தேநீர் கடையில் சென்று தேநீர் குடித்துவிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web