கோவில்பட்டி தொகுதியில் பிரச்சாரம் மேற் கொள்வதற்கான நேரம் வெளியானது!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொது செயலாளர் டிடிவி தினகரன் இன்று கோவில்பட்டி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்!
 
கோவில்பட்டி தொகுதியில் பிரச்சாரம் மேற் கொள்வதற்கான நேரம் வெளியானது!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. அதிமுக கட்சி அதனுடன் கூட்டணியாக பாஜக பாமக கட்சிகளை வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தேமுதிகவினர் அதிமுகவில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று அழைக்கப்படும் அமமுக கூட்டணியில் இணைந்தது.

ammk

அதற்காக அமமுக தரப்பில் இருந்து 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.  அமமுக கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். மேலும் அவர் இன்று கோவை பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். மேலும் அவர் நேரம் போட்டு கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன்படி அவர் இன்று மாலை 4 மணிக்கு கடம்பூர் பகுதியிலும் மாலை 4 .45மணிக்கு காமநாயக்கன்பட்டி பகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அதனைத்தொடர்ந்து கரிசல்குளம் பகுதியில் 5.15க்கு டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மேலும் பாண்டவர்மங்கலம் பகுதியில்5.30 மணிக்கு ராஜ் நகர் பகுதியில் 5.45 மணிக்கு அவர் பிரச்சாரம் மேற்கொள்ள வருகிறார். மேலும்  6 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார். இலுப்பையூரணி 7. 10 மணிக்கும் செவக்காடு பகுதியில் இரவு 7.30 மணிக்கு டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

From around the web