டிக்டாக் ரவுடி பேபி சூர்யா தற்கொலை முயற்சி: அதிர்ச்சி காரணம்

திருப்பூர் அய்யம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் டிக்டாக்கில் கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு புகழ் பெற்றார். ரவுடி பேபி என்ற பெயரில் டிக்டாக்கில் வலம் வந்த இவருக்கு ஃபாலோயர்கள் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சமீபத்தில் ஊரடங்கு காரணமாக சிங்கப்பூரில் சிக்கிக்கொண்ட சூர்யா அதன்பின் இரண்டு மாதங்கள் கழித்து திருப்பூர் திரும்பினார். அவருக்கு கொரோனா சோதனை பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியபோது அவர் தனக்கு தனி அறை வேண்டும் என்றும் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் ஏசி
 

டிக்டாக் ரவுடி பேபி சூர்யா தற்கொலை முயற்சி: அதிர்ச்சி காரணம்

திருப்பூர் அய்யம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் டிக்டாக்கில் கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு புகழ் பெற்றார். ரவுடி பேபி என்ற பெயரில் டிக்டாக்கில் வலம் வந்த இவருக்கு ஃபாலோயர்கள் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் ஊரடங்கு காரணமாக சிங்கப்பூரில் சிக்கிக்கொண்ட சூர்யா அதன்பின் இரண்டு மாதங்கள் கழித்து திருப்பூர் திரும்பினார். அவருக்கு கொரோனா சோதனை பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியபோது அவர் தனக்கு தனி அறை வேண்டும் என்றும் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் ஏசி வேண்டும் என்றும் அடம் பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதனையடுத்து திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள பரிசோதனை நிலையத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் தனியார் நிருபர் ஒருவரை கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை டிக் டாக் சூர்யா வெளியிட்டதாகவும், இந்த வீடியோவின் அடிப்படையில் அந்த நபர் போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென இன்று காலை டிக் டாக் சூர்யா தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய முயன்றதாகவும் அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web