டிக் டாக் செயலி உறுதியாக தடை செய்யப்படும்- அமைச்சர் மணிகண்டன்

உலகமெங்கும் டிக் டாக் என்ற செயலி ஆண்ட்ராய்டு ஃபோன்களில் இருந்து வருகிறது. நமது ஆடலை, பாடலை, நடிப்புத்திறமையை வெளிப்படுத்த உதவும் இந்த செயலி உண்மையில் நல்ல செயலிதான். உலகம் முழுவதும் பலரும் நல்லவிதமாக இந்த செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் , இந்தியாவில் மட்டும் அதுவும் தமிழகத்தில் இந்த செயலியில் வரும் சேட்டைகள் சொல்லி மாளாது. போலீஸ் ஸ்டேசனுக்குள் கோவில் திருவிழா அனுமதி கேட்க சென்ற சிலர். வெளியே வரும்போது போலீஸ் ஸ்டேசன் வாசலிலேயே ரவுடிகள் பேசும்
 

உலகமெங்கும் டிக் டாக் என்ற செயலி ஆண்ட்ராய்டு ஃபோன்களில் இருந்து வருகிறது. நமது ஆடலை, பாடலை, நடிப்புத்திறமையை வெளிப்படுத்த உதவும் இந்த செயலி உண்மையில் நல்ல செயலிதான். உலகம் முழுவதும் பலரும் நல்லவிதமாக இந்த செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் , இந்தியாவில் மட்டும் அதுவும் தமிழகத்தில் இந்த செயலியில் வரும் சேட்டைகள் சொல்லி மாளாது.

டிக் டாக் செயலி உறுதியாக தடை செய்யப்படும்- அமைச்சர் மணிகண்டன்

போலீஸ் ஸ்டேசனுக்குள் கோவில் திருவிழா அனுமதி கேட்க சென்ற சிலர். வெளியே வரும்போது போலீஸ் ஸ்டேசன் வாசலிலேயே ரவுடிகள் பேசும் டயலாக்கை போலீசை எதிர்த்து பேசி டிக் டாக் வெளியிட்டது, பல பெண்கள் ஆபாச வரிகளுக்கு ஆபாசமாக நடனம் ஆடுவது போன்றவற்றால் நீண்ட நாளாக இந்த செயலியை தடை செய்ய கோரிக்கை வலுத்து வருகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்னேயே தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், எம்.எ.ஏ தமிமுன் அன்சாரி கோரிக்கையை ஏற்று இதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பின்பு கோர்ட்டும் இந்த செயலியை தடை செய்தது. ப்ளே ஸ்டோரில் இந்த செயலி நீக்கப்பட்டது.

டிக் டாக் தலைமை நிறுவனம் எப்படியோ போராடி மீண்டும் டிக் டாக்கை கொண்டு வந்தது. இந்நிலையில் அமைச்சர் மணிகண்டன் டிக் டாக் செயலி உறுதியாக தடை செய்யப்படும் என சட்டசபையில் கூறியுள்ளார்.

From around the web