இந்திய ஊழியர்களை பணி நீக்கம் செய்ய டிக்டாக் நிறுவனம் முடிவு!

டிக்டாக், ஹலோ உள்ளிட்ட நூற்றுக்கணக்கான செயலிகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் சீனா ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சீனாவின் பல செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது
அதுமட்டுமின்றி டிக்டாக், ஹலோ உள்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு நிரந்தர தடை விதித்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இதனை அடுத்து டிக் டாக் மற்றும் ஹலோ ஆகிய இந்திய நிறுவனங்களை மூட டிக்டாக் தாய் நிறுவனமான பைடான்ஸ் நிறுவனம் முடிவு செய்தது என்பதும் செய்திகள் வெளியானது
இந்த நிலையில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசின் நிரந்தர தடை விதித்த நிலையில் பெரும்பாலான இந்திய ஊழியர்களை பணி நீக்கம் செய்ய டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைடான்ஸ் என்ற நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
இந்த நிறுவனத்தில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணி செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய அரசின் முடிவுக்கு எதிராக அதிரடியாக பைடான்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது