துரைமுருகன், டிஆர் பாலு போட்டியின்றி தேர்வு: முடிவுக்கு வந்தது பதவிப்போட்டி

திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் மட்டுமே போட்டியிட்டதால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். அதேபோல் பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலு மட்டுமே போட்டியிட்டதால் அவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். இந்த இரு பதவிகளுக்கும் தலா ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததை அடுத்து இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர் என்பதும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நிமிடங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அவர்கள் காலமானதை அடுத்து அவரது பதவிக்கு துரைமுருகன் போட்டியிடுவதாக இருந்ததை அடுத்து அவர் தனது பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுச் செயலாளர் தேர்வு நடைபெறாமல் இருந்தது. 

இந்த நிலையில் வரும் ஒன்பதாம் தேதி நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் துரைமுருகன் மற்றும் டிஆர் பாலு தரப்பிலிருந்து மட்டுமே வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன 

வேறு யாருமே வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web