ஒரே தடுப்பூசிக்கு மூன்று விலை! எப்படி அனுமதித்தது மத்திய அரசு? காங்கிரஸ் கட்சியின் தலைவர் 

ஒரே தடுப்பூசிக்கு மூன்று விலை நிர்ணயிக்க மத்திய அரசு எப்படி அனுமதித்தது என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்!
 
ஒரே தடுப்பூசிக்கு மூன்று விலை! எப்படி அனுமதித்தது மத்திய அரசு? காங்கிரஸ் கட்சியின் தலைவர்

தமிழகத்தில் முன்னர் அறிவித்திருந்த தேதிப்படி ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் எதிர்கட்சியான திமுக கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது. மேலும் தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அவருக்கு சில தினங்களுக்கு முன்பாக கொரோனா நோய் கண்டறியப்பட்டது. அதனால் அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த கொரோனா கடந்த ஆண்டு இந்தியாவில் வர தொடங்கியது.

covishield

ஆனால் இந்தியாவின் பெரும் முயற்சியால் கடந்த ஆண்டு கொரோனா நோய் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் இந்நோயின் தாக்கம் தற்போது மீண்டும் எழுந்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் இதற்காக மத்திய அரசின் சார்பில் கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் அனைத்து மாநிலங்களுக்கும் கொடுக்கப்படுகின்றன. ஆயினும் ஒரு சில பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுகிறது.  காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள சோனியா காந்தி மத்திய அரசுக்கு கேள்வி ஒன்றினை எழுப்பியுள்ளார். அதன்படி அவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார். அதன்படி அவர் ஒரே தடுப்பூசிக்கு 3 விலையை நிர்ணயிக்க மத்திய அரசு அனுமதித்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் இது தொடர்பாக  கடிதம் எழுதி உள்ளார். கடந்த ஆண்டுகளில் கொரோனா இருந்து மத்திய அரசு பாடம் கற்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார் மேலும் மத்திய அரசு தொடர்ந்து தன்னிச்சையான பாரபட்சமான கொள்கையை அமல்படுத்துவது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் மருந்தை 3 வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்கிறது.

ஒரு மருந்து மூன்று வெவ்வேறு விலைகளில் விற்பனை எப்படி செய்ய முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்  மாநில அரசுகளுக்கும் பொருளாதார சுமை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். இது போன்று அவரது கடிதத்தில் மருத்துவமனைகளில் படுக்கையில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது என்றும் எழுதியுள்ளார்.

From around the web