தமிழகத்தில் மூன்று பேருக்கு "டெல்டா ப்ளஸ்" கொரோனா வைரஸ் பாதிப்பு!

தமிழகத்தில் இதுவரை மூன்று பேருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா பாதிப்பு உறுதியாகின்றது
 
delta +

சில தினங்களாக இந்தியாவில் அதிகமாகப் பேசப்பட்ட வார்த்தையாக காணப்பட்டது கொரோனா .அந்தப்படி கொரோனா வைரஸ் இன் தாக்கமானது இந்தியாவில் தலைவிரித்தாடியது. இதன் விளைவாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டன. மேலும் தொடர்ச்சியாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. இதன் விளைவாக இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே இதனால் நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது கண்ணுக்கு தெரிகிறது. மேலும் இவை இரண்டாம் நிலை என்றும் கூறப்படுகிறது.subramanian

இதன் பின்னர் மூன்றாவது கொரோனா  வர இருப்பதாகவும் கூறப்படுகின்றன குழந்தைகளை பாதிப்பிற்குள்ளாகும் என்றும் கூறப்படுகிறது. அதன்படி அவற்றிற்கு டெல்டா ப்ளஸ் என்று பெயரிடப்பட்டன. மேலும் இந்த டெல்டா ப்ளஸ்  வைரஸானது இந்தியாவில் சில தினங்களுக்கு முன்பாக 40 பேருக்கு கண்டறியப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. அவை மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா மற்றும் கேரள மாநிலத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டன மேலும் தமிழகத்தில் சில தினங்களாக சென்னையில் உள்ள ஒரு நபருக்கு இந்நோய் தொற்று கண்டறியப்பட்டது.

ஆனால் தற்போது தமிழகத்திற்கு பேரதிர்ச்சி உருவாகியுள்ளது .அதன்படி தற்போது தமிழகத்தில் மூன்றாக உயர்ந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இதுவரை மூன்று பேருக்கு இந்த டெல்டா ப்ளஸ் வைரஸ் பாதிப்பு உறுதியானதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும் அவர்கள் சென்னை கொரட்டூர் காஞ்சிபுரம் மற்றும் மதுரையில் உள்ள தலா ஒருவர் என டெல்டா ப்ளஸ் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும் டெல்டா ப்ளஸ் வைரஸ் பரிசோதனையை தமிழகத்தில் செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

From around the web