தமிழகத்தில் மேலும் 3 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது ஏற்கனவே தமிழகத்தில் 9 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது மேலும் 3 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது மதுரையைச் சேர்ந்த 54 வயது நபர் ஒருவருக்கும், திருப்பூரைச் சேர்ந்த 48 வயது நபர் ஒருவருக்கும், சென்னை புரசைவாக்கத்தில் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது
 
தமிழகத்தில் மேலும் 3 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே தமிழகத்தில் 9 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது மேலும் 3 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது

மதுரையைச் சேர்ந்த 54 வயது நபர் ஒருவருக்கும், திருப்பூரைச் சேர்ந்த 48 வயது நபர் ஒருவருக்கும், சென்னை புரசைவாக்கத்தில் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

சென்னை மற்றும் திருப்பூரைச் சேர்ந்தவர்கள் இருவரும் லண்டனில் இருந்து சமீபத்தில் இந்தியாவுக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மதுரையைச் சேர்ந்த நபர் எந்த வித வெளிநாட்டு மற்றும் வெளிமாநில தொடர்பும் இல்லாத நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web