இன்னும் மூணு நாள்ல ஆக்சிசன் தயாரிக்கப்படும்; "அதுவும் ஸ்டெர்லைட்ல"! ரெண்டு நாள்ல தட்டுப்பாடு இருக்காது!!

இன்னும் மூன்று நாட்களில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் உற்பத்தி நடைபெறும் என்று கூறியுள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு!
 
இன்னும் மூணு நாள்ல ஆக்சிசன் தயாரிக்கப்படும்; "அதுவும் ஸ்டெர்லைட்ல"! ரெண்டு நாள்ல தட்டுப்பாடு இருக்காது!!

பத்தாண்டுக்கு பின்னர் தற்போது ஆட்சியில் உள்ளது திமுக. திமுக சார்பில் முதல்வராக அக்கட்சியின் தலைவரான திரு மு க ஸ்டாலின் உள்ளார். அவர் தான் மக்களுக்கு கூறிய வாக்குறுதிகள் அனைத்தையும் வரிசையாக தற்போது நிறைவேற்றி வருகிறார். மேலும் அவருக்கு உதவும் வண்ணமாக அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களும் தங்களது பணியை மிகவும் திறம்பட செய்து வருகின்றனர். தற்போது அமைச்சர் தங்கம்தென்னரசு சில தகவல்களை கூறியுள்ளார்.thenarasu

அதன்படி ஸ்டெர்லைட் ஆலையில் இன்னும் மூன்று நாட்களில் ஆக்சிசன் உற்பத்தி செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார். மீண்டும் திறப்பதற்காக முந்தைய அரசின் சார்பில் அனைத்து கட்சி கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் ஒருமித்து முடிவெடுத்தன. தற்போது ஸ்டெர்லைட் ஆலையானது திறக்கப்பட்டுள்ளது. மேலும்  தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் உற்பத்தி செய்வதற்கான பணியும் நடைபெறுகிறது. மேலும் தங்கம் தென்னரசு சில தகவல்களையும் கூறியுள்ளார்.

எங்கெல்லாம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அவர் கூறியுள்ளார். இரண்டு நாட்களில் ஆக்சன் தட்டுப்பாடு சரி செய்யப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து நான்கு ஆக்சிசன் கண்டெய்னர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். சீனாவிலிருந்து 12  கண்டெய்னர்கள் மூலமாக தமிழகத்துக்கு ஆக்சிசன் கொண்டுவரப்பட உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் முடித்து வைக்கப்பட்டுள்ளது என்றும் தென்னரசு கூறியுள்ளார்.

From around the web