சாத்தன்குளம் வழக்கு: இன்று காலை மேலும் மூவர் கைது

சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவருடைய மரணம் குறித்த வழக்கு நேற்று சிபிசிஐடி போலீசாரால் பதிவு செய்யப்பட்டது இதனையடுத்து அதிரடி நடவடிக்கையாக நேற்று இரவு சாத்தான்குளம் சப் இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் இந்த வழக்கில் மொத்தம் 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் மீதி ஐவரையும் கைது செய்ய சிபிசிஐடி போலீஸார் தீவிர முயற்சியில் இருந்தனர். இந்த முயற்சியின் பலனாக
 
சாத்தன்குளம் வழக்கு: இன்று காலை மேலும் மூவர் கைது

சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவருடைய மரணம் குறித்த வழக்கு நேற்று சிபிசிஐடி போலீசாரால் பதிவு செய்யப்பட்டது

இதனையடுத்து அதிரடி நடவடிக்கையாக நேற்று இரவு சாத்தான்குளம் சப் இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த வழக்கில் மொத்தம் 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் மீதி ஐவரையும் கைது செய்ய சிபிசிஐடி போலீஸார் தீவிர முயற்சியில் இருந்தனர். இந்த முயற்சியின் பலனாக இன்று காலை சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் மற்றும் காவலர் முத்துராஜ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுவார்கள் என்றும் தலைமறைவாக இருக்கும் மீதி இருவரையும் விரைவில் கைது செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது

மதுரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் எடுத்து வரும் கைது நடவடிக்கைகளுக்கு சாத்தான்குளம் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த பகுதி மக்கள் தற்போது பட்டாசு வெடித்து இந்த கைது நடவடிக்கையை கொண்டாடி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

From around the web