சென்னையை விட்டுச் சென்ற மூன்று லட்சம் பேர்: காற்றில் பறக்கவிடப்பட சமூக இடைவெளி 

 

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து சுமார் 3 லட்சம் பேர் பேருந்துகள் மற்றும் ரயில்களில் சொந்த ஊர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

நாளை தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கின்றது இதனை அடுத்து சென்னையில் இருந்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும் வட மாவட்டங்களுக்கும் செல்வதற்காக பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் குவிந்தனர் 

diwali bus

கடந்த 2 நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து 3 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இன்றும் சுமார் மூவாயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

ஆம்னி பேருந்துகளில் கட்டணம் மிகவும் அதிகமாக இருப்பதாகவும் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாலும் பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்து உள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் அரசு பேருந்துகளிலும் ரயில்களிலும் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது

கடந்த ஆறு மாதங்களாக வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த பொதுமக்கள் கடந்த ஒரு மாதமாகத்தான் சென்னை உள்ளனர். இருப்பினும் தீபாவளி கொண்டாட சொந்த ஊர் நோக்கி அனைவரும் படையெடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web