டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு: தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 19ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்தது என்பது தெரிந்ததே இந்த நிலையில் ஏற்கனவே சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள
 

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு: தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 19ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ஏற்கனவே சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது

இதனை அடுத்து இதுநாள் வரை டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை தங்குதடையின்றி வாங்கிக் கொண்டிருந்த மூன்று மாவட்டத்தைச் சேர்ந்த குடிமகன்கள் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர். முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 12 நாட்களிலும் மது கிடைக்காமல் வேறு இடத்திற்குச் சென்று வாங்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் தமிழக அரசு நான்கு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று எடுத்த முடிவுக்கு பாராட்டு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் கொரோனா வைரஸ் பரபரப்பு முடியும் வரை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web