மூன்று வேளாண் மசோதாக்களை திரும்ப பெற முடியாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்!

 

சமீபத்தில் மத்திய அரசு மூன்று வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது என்பதும் அந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் பஞ்சாப் மற்றும் அரியானா உள்பட வடமாநில விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் விவசாயிகள் மற்றும் மத்திய அரசு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் விவசாயிகளின் எந்த கோரிக்கையையும் ஏற்க தயார் என்றும் ஆனால் மூன்று வேளாண் மசோதாக்களை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 

farmers

விவசாயிகள் சங்கம் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகள் இடையே எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இன்னொரு பக்கம் பிரமாண்டமான டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

மேலும் வரும் 26 ஆம் தேதி குடியரசு தின விழா நடைபெற இருக்கும் நிலையில் அந்த பாதைகள் அனைத்தையும் முடக்கும் வகையில் இந்த டிராக்டர் பேரணி இருக்கும் என்றும் கருதப்படுகிறது. இந்த நிலையில் வேளாண் மசோதாக்களை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web