சுயமரியாதையை விரும்புவோர் பாஜகவுக்கு வாருங்கள்!சிடி ரவி அழைப்பு!

அதிமுக பாஜக கூட்டணிக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது.சட்டமன்றதேர்தல் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது.தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக கட்சி பாஜக, பாமக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. பாஜகக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 20 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்தது பாஜக. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் முருகன் தாராபுரம் தொகுதியிலும், ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்புவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

bjp

மேலும் அதிமுக தரப்பிலிருந்து பாஜகவிற்கு ஒரு  மக்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டது . கன்னியாகுமரியில் நடைபெற உள்ள இடைத் தேர்தலுக்கான தொகுதியாகவும் உள்ளது. மேலும் கன்னியாகுமரி நடைபெற உள்ள  மக்களவை இடைத்தேர்தலில் பாஜக தரப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 சுயமரியாதையை விரும்புவார்கள் பாஜகவிற்கு வாருங்கள் என தமிழக மேலிட பொறுப்பாளர்  சிடி ரவி அழைப்பு விடுத்துள்ளார்.மேலும் தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணிக்கு சாதகமான சூழல் உள்ளதால் மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் தமிழக திமுகவிலிருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ சம்பத், சிடி ரவி  முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web