"டெல்டா ப்ளஸ் வைரஸ்" பாதித்தவர்கள் சகஜ நிலைக்கு திரும்பினர்;

டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் தற்போது சகஜ நிலைக்கு திரும்பியது அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்
 
delta +

தற்போது நம் தமிழகத்தில் அதிகப்படியான மக்கள் அச்சம் அடையும் ஒரு நோய் என்றால் அதனை கொரோனா என்றே கூறலாம். இவை நம் தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை சில மாதங்களாக உருவாக்கியது. மேலும் உலக நாடுகள் பலவும் இந்தியாவை கண்டு வருந்தும் நிலையில் இந்தியாவில் இந்த நோயின் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா நோயின் பாதிப்பு படிப்படியாக குறைந்து உள்ளது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இந்த நோயின் மூன்றாவது வகை தற்போது இந்தியாவில் பல மாநிலங்களில் பரவ தொடங்கியுள்ளது.subramanian

மேலும் அவை வேகமாக பரவுகிறது. மேலும் அவற்றிற்கு டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நம் தமிழகத்தில் இது 9 பேருக்கு நேற்றையதினம் டெல்டா ப்ளஸ் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தமிழகத்துக்கு மத்திய அரசு அவசர கடிதமொன்றை எழுதி நிலையில் தற்போது இந்த நோய் குறித்து அமைச்சர் சுப்பிரமணியன் சில மகிழ்ச்சியான தகவல்களை கூறியுள்ளார்.

அந்தப்படி இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சகஜ நிலைமைக்கு திரும்பி விட்டனர் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். மேலும் டெல்டா ப்ளஸ் கொரோனா பாதித்தவர்கள் சகஜ நிலைக்கு திரும்பி விட்டதால் கட்டுப்படுத்தும் பகுதியாக மாற்ற வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மே மாதத்தில்  கொரோனா உச்சத்தில் இருந்தபோது எடுத்த முடிவுகளை தான் மத்திய அரசு வெளியிட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மீண்டும் யாருக்காவது இந்தடெல்டா ப்ளஸ் கொரோனா ஏற்பட்டால் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியம் கூறியுள்ளார். மேலும் பெரிய அளவில் பெறவில்லை என்றும் வைரஸ் பரிசோதனைக்கான மையம் சென்னையில் தேவைப்பட்டது என்றும் அமைச்சர். கூறியுள்ளார்

From around the web