அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டி: தோப்பு வெங்கடாச்சலம் கட்சியில் இருந்து நீக்கம்!

 
அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டி: தோப்பு வெங்கடாச்சலம் கட்சியில் இருந்து நீக்கம்!

அதிமுக தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்த வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் அமைச்சரும் அதிமுக பிரமுகரான தோப்பு வெங்கடாசலம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கடந்த 2011 ஆம் ஆண்டு பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தோப்பு வெங்கடாசலம் அமைச்சராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் 2016 ஆம் ஆண்டு அவர் வெற்றி பெற்றாலும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அதிருப்தியில் இருந்த தோப்பு வெங்கடாச்சலம் அவர்களுக்கு மீண்டும் பெருந்துறை தொகுதியில் போட்டியிட அதிமுக தலைமை சீட் வழங்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தோப்பு வெங்கடாசலம் நேற்று திடீரென சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் 

இதனை அடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தோப்பு வெங்கடாச்சலம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

thoppu venkatachalam

From around the web