தியாகராய நகர் தொகுதி அதிமுகவின் வெற்றி கோட்டை! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

தியாகராய நகர் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் அதற்காக வேலைப்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. 234 தொகுதிகளிலும் பல கட்சி வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மேலும் இந்த 234 தொகுதிகளிலும் பல கூட்டணிகள் களமிறங்கியுள்ளனர்.  தமிழகத்தின் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக கட்சி  கூட்டணியாக பாஜக, பாமக போன்ற கட்சிகள் வைத்துள்ளது.

admk

 அதிமுக தரப்பிலிருந்து பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது .அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அத்தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் சென்னையில் உள்ள தியாகராய நகரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவர் கூறினார் சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுகவின் வெற்றி கோட்டை எனவும் அவர் கூறினார். மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலமாக சென்னை  முழுமையாக மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் முதல்வர் பிரச்சாரத்தில் கூறினார். சென்னையில் 3000 இடங்களில் மழைநீர் கால்வாய்கள் அமைத்துள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் கூறினார்.

From around the web