திமுகவுக்கு இது  இறுதி தேர்தல் ஆக இருக்க வேண்டும் பிரச்சாரத்தில் முதல்வர்!

இதுவே திமுகவுக்கு இறுதி தேர்தல் ஆக இருக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் கூறினார்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் வேலைப்பாடுகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தேர்தல் ஆணையம் ஆனது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. மேலும் தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினரும் வாகன சோதனையில் ஈடுபட்டு ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் நகைகளையும் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர்.

eps

இதன் மத்தியில் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக பாஜக மற்றும் பாமக கட்சி வைத்துள்ளது. அதிமுக கட்சி சார்பில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். மேலும் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டிக் கொண்டு வருகிறார். அவர் பிரச்சாரத்தில் கூறினார், இந்த சட்டமன்ற தேர்தல் திமுக கட்சிக்கு இறுதியானதாக இருக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை சொந்தமாக்கிக் கொள்வார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் கனவு ஒருபோதும் நிறைவேறாது எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.ஏனென்றால் மக்கள் சக்தி அதிமுகவில் உள்ளது எனவும் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

From around the web