சென்னைவாசிகளுக்கு மேலும் கஷ்டம் காரணம் இந்த சுட்டெரிக்கும் சூரியன்!

சென்னையில் வெப்பநிலையானது அதிகபட்சம் 95 டிகிரி உயரும் என்றும் குறைந்தபட்சமாக 79 டிகிரி பாரன்ஹீட் அளவாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது!
 
சென்னைவாசிகளுக்கு மேலும் கஷ்டம் காரணம் இந்த சுட்டெரிக்கும் சூரியன்!

தமிழகத்தில் சில தினங்களாக வெயிலின் தாக்கமானது மிகவும் அதிகரித்துள்ளது. காரணம் தமிழகத்தில் சில தினங்களாக முன்பாக கோடை காலம் தொடங்கியது. இதனால் தமிழகத்தில் பல வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஒரு சில பகுதிகளில் வெளியே  செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். மேலும் தமிழகத்தில் சென்னை வானிலை ஆய்வு மையம் சில தகவல்களை கூறியுள்ளது. அதன்படி தென் தமிழக மக்களுக்கு நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.weather

ஆனால் தற்போது சென்னைவாசிகளுக்கு மேலும் எரிச்சலடையும் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாக காணப்படுகிறது. சென்னையில் வெப்பநிலை   அதிகபட்சம் 95 டிகிரி வரை உயரும் என்றும் கூறியுள்ளது மேலும் குறைவான வெப்பநிலையானது 79 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும் என்றும் கூறியுள்ளது. இதனால் சென்னையில் வெப்பநிலை உயர்ந்து காணப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளதால் சென்னை மக்கள் மிகுந்த எரிச்சலில் உள்ளனர். சென்னை மக்கள் மட்டுமின்றி கடலோர மாவட்டங்களிலும் வெயில் சுட்டெரிக்கும் என்றும் கூறியுள்ளது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் காற்றில் ஈரப்பதம் குறைவதால் சென்னை முதல் குமரி வரை வெயில் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களில்  மாலை முதல் மறுநாள்  காலை வரை புழுக்கம் அதிகமாக காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது இதனால் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் இந்த கோடைகாலத்தில் வெக்கையை உணர்வர் என்றும் கூறப்படுகிறது.

From around the web