பெண்போலீஸ் மேல பைக்க விட்டால் இதுதான் கதி; இருவர் கைது!

பெண் காவலர் வைஷ்ணவி மீது இரு சக்கர வாகனத்தில் மோதி சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர்!
 
police

தற்போது நம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மிகவும் கட்டுப்பாடான சூழ்நிலை காணப்படுகிறது. காரணம் என்னவெனில் நம் தமிழகத்தில் ஆட்கொல்லி நோயான  கொரோனாநோயின் வீரியம் அதிகமாக காணப்படுவதால் தமிழகத்திலுள்ள பல பகுதிகளில் ஊரடங்கு மிகவும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மேலும் பலர்  வெளியே சுற்றி வருகின்றனர், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்கின்றன.lockdown

மேலும் பல பகுதிகளில் இதனை கண்டுகொள்ளாமல் மக்கள் இன்றளவும் வெளியே சுற்றி கொண்டுள்ளனர் என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இத்தகைய சோதனையில் ஈடுபட்ட பெண் போலீஸ் மீது இருவர் வாகனத்தை மோதி விட்டு ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் சென்னை பாண்டிபஜாரில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன்படி சென்னை பாண்டி பஜாரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர் மீது தங்களது இருசக்கர வாகனத்தை மோதி விட்டு சென்ற இருவரையும் தற்போது காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் பெண் காவலர் வைஷ்ணவி மீது அவர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் மோதி விட்டு தப்பியதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் இருவரும் நீஜாம் மற்றும் விக்ரம் ஆகியோர் ஆவர். மேலும் அவர்களை பிடித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நம் தமிழகத்தில் நிகழ்கிறது என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

From around the web