இதுவே நான் போட்டியிடும் கடைசி தேர்தல்: முதல்வரின் உருக்கமான பேச்சு

 

பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்து விட்ட நிலையில் மூன்றாம் கட்ட தேர்தல் நவம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் பீகார் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் திடீரென இதுவே எனது கடைசி தேர்தல் எனக் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பீகார் மாநிலம் பூர்னியாஎன்ற பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ்குமார் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அவர் பேசியபோது இதுவே நான் போட்டி இடும் கடைசி தேர்தல் என்றும் எனவே எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் மக்களிடம் கேட்டுக் கொண்டார்

இந்த தேர்தல் பிரச்சாரம் மிகவும் உருக்கமாக இருந்ததை அடுத்து மக்கள் நெகிழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் முதல்வருக்கு அனுதாப ஓட்டுக்கள் விழ வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஏற்கனவே இதே போன்ற வசனத்தை தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசியல் தலைவர்களும் பயன்படுத்தி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web