அதிபர் கையெழுத்து போட்டதும் முதல் வேலை இதுதான்: ஜோபைடன்

 

அமெரிக்க அதிபராக கையெழுத்து போட்டவுடன் முதல் வேலையாக கொரோனாவை ஒழிக்க பாடுபடுவேன் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி முகத்தில் இருக்கும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

அமெரிக்க அதிபர் தேர்தலில் 264 வாக்குகள் பெற்று ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார். பெரும்பான்மைக்கு இன்னும் 4 வாக்குகள் மட்டுமே தேவை என்றாலும் அவருடைய கட்சி 300 வாக்குகளை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் அமெரிக்க மக்களிடையே பேசிய ஜோ பைடன் ’அமெரிக்க அதிபராக கையெழுத்து போட்டதும் முதல் வேலையாக கொரோனாவுக்கு எதிரான திட்டங்களை வகுப்பேன் என்றும் இந்த கொள்ளை நோயில் இருந்து மக்களை மீட்டெடுப்பதே எனது முதல் கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார் 

அமெரிக்காவில் ஒரு பக்கம் தேர்தல் நடந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. டிரம்பின் மோசமான நடவடிக்கை காரணமாக தொடர்ந்து அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்த நிலையில் ஜோ பைடன் அதிபரானது அவரது ஆக்கபூர்வமான நடவடிக்கையால் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web