விடுதலைக்கு பின் முதல் வேலை இதுதான்: சசிகலாவின் பலே திட்டம்!

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் விடுதலை ஆவார் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் விடுதலைக்குப் பின் அவருடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? அவர் எங்கு தங்குவார்? என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன 
சிறையிலிருந்து விடுதலை ஆனவுடன் அவர் தங்குவதற்காக போயஸ் கார்டன் அருகிலேயே ஒரு பங்களா கட்டப்பட்டு வருவதாகவும் அங்கு தான் அவர் தங்குவார் என்றும் கூறப்படுகிறது ஆனால் அவர் தனது கணவரின் தஞ்சை வீட்டில்தான் சசிகலா தங்குவார் என்று தெரியவந்துள்ளது 

இதற்காக அந்த வீட்டில் தற்போது மராமத்து பணிகள் பார்க்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது வரும் ஜனவரியில் தினகரனின் மகள் திருமணம் நடைபெற உள்ளதால் விடுதலைக்கு பின் சசிகலாவின் முதல் வேலை தினகரனின் மகள் திருமணத்தில் கலந்து கொள்வதுதான் என்றும் கூறப்படுகிறது

ஏற்கனவே ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு அரசுடமையாக்கப்பட்டது என்பதும் சசிகலாவின் சிறுதாவூர் பங்களா கொடநாடு எஸ்டேட் ஆகியவை வருமான வரித் துறையால் முடக்கப்பட்டுள்ளது என்பதால் விடுதலைக்கு பின் சசிகலா தஞ்சையில் தங்குவதற்கு தான் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

From around the web