முதல்வர்ன்னா இவர் தான் முதல்வர் அதிரடி நிவாரணம்:"50,000 நிதி", "கல்வி செலவு ஏற்பு"!!

டெல்லியில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களுக்கு 50,000 நிதி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்!
 
முதல்வர்ன்னா இவர் தான் முதல்வர் அதிரடி நிவாரணம்:"50,000 நிதி", "கல்வி செலவு ஏற்பு"!!

தற்போது நாடெங்கும் கொரோனாவின் பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த பாதுகாப்பு மத்தியில் உள்ளனர் எனினும் நம் இந்தியாவில் கடந்த ஆண்டு கட்டுப்படுத்தப்பட்ட இந்நோயானது இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மீண்டும் பரவத்தொடங்கியது. இதனால் நாட்டு மக்களுக்கே முன்னோடியாக இருக்க தலைநகரமான டெல்லி மாநகரம் முதன்முறையாக ஊரடங்கு மீண்டும் அம்மாநிலத்தில் அமல்படுத்தியது. இதனால் அம்மாநிலத்தில் சில நாட்களுக்கு பின்னர் கொரோனாநோயின் தாக்கம் வெகுவாக குறைந்தது.death

இந்நிலையில் தற்போது டெல்லியில் முதல்வராக உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். அவர் தற்போது அதிரடி நிவாரணங்களை அறிவித்துள்ளார். அதன்படி டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 50,000 நிதி உதவி வழங்கப்படும் என்றும் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

மேலும் ஒரு குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் இந்த கொரோனா உயிரிழந்தால் அவரின் குடும்பத்திற்கு மாதம் 2500 நிதி உதவி வழங்கப்படும் என்றும் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்., மேலும் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி நிவாரண உதவிகளை கூறியுள்ளார். இதுவரை 22111 பேர் உயிரிழந்த நிலையில் இத்தகைய நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறபடுகிறது.

From around the web