இது நல்லதுக்கு அல்ல முதல் இடத்தில் தமிழ்நாடு , இரண்டாம் இடத்தில் அசாம்!

தடுப்பூசிகளை வீணாக்கும் மாநிலத்தில் முதல் இடத்தில் தமிழ்நாடு உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது!
 
இது நல்லதுக்கு அல்ல முதல் இடத்தில் தமிழ்நாடு , இரண்டாம் இடத்தில் அசாம்!

தற்போது எங்கு பார்த்தாலும் கண்ணுக்கே தெரியாமல் வளர்ந்துள்ளது ஆட்கொல்லி நோயான கொரோனா நோயின் தாக்கம். மேலும் கொரோனாக்கு எதிராக நம் தாய்த்திரு நாடு தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவும் போராடிக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய அரசின் சார்பில் பல்வேறு மாநில அரசு மருத்துவமனைகளுக்கு தனியார் மருத்துவமனைகளுக்கும் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை பல மாநிலங்களில் அதிகமாக காணப்படுகிறது.government

மேலும் கொரோனா நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களுக்கு ஆக்சிசன் தேவையும் உள்ளது. ஆனால் சில தினங்களாக தடுப்பூசி, இந்த ஆக்சிஜனின் பற்றாக்குறையும் அதிகமாக காணப்படுகிறது .இதில் தற்போது மத்திய அரசானது சில தகவலை வெளியிட்டுள்ளது. நம் தமிழ்நாட்டிற்கு முதல் இடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்படி அதிக கொரோனா தடுப்பூசிகளை வீணாகும் மாநிலத்தின் பட்டியலில் நம் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழ்நாட்டில் 8.83 விழுக்காடு தடுப்பூசிகள் வீணாவதாகவும் கூறப்படுகிறது தமிழ்நாட்டை அடுத்து அசாம் மாநிலம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது மேலும் இந்த அசாம் மாநிலத்தில் 7.7 விழுக்காடுகள் தடுப்பூசிகளின் வீணாவதாகவும் கூறியுள்ளது மேலும் தமிழ்நாடு தடுப்பூசி வினாக்களில் முதலிடத்தில் உள்ளதால் அதிர்வலை நாடெங்கும்  பரவுகிறது.

From around the web