இனி இப்படித்தான் உங்களை திருத்துவோம்… உதயநிதி ஸ்டாலினின் ட்வீட்!!

கொரோனா ஊரடங்கால் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் நடைபெறாமல் இருந்தநிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என மாணவர்களும் பெற்றோர்களும் தவித்து வந்தனர். அந்தவகையில், ஜூன் 1 அன்று தேர்வுகள் துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராததால் கொண்டு தேர்வு ஜூன் 15 க்கு ஒத்திவைக்கப்பட்டன. இந்தநிலையில் 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என திமுக சார்பில் நாளை (ஜூன் 10 ஆம் தேதி) கருப்புக்கொடி
 
இனி இப்படித்தான் உங்களை திருத்துவோம்… உதயநிதி ஸ்டாலினின் ட்வீட்!!

கொரோனா ஊரடங்கால் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் நடைபெறாமல் இருந்தநிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என மாணவர்களும் பெற்றோர்களும் தவித்து வந்தனர். அந்தவகையில், ஜூன் 1 அன்று தேர்வுகள் துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராததால் கொண்டு தேர்வு ஜூன் 15 க்கு ஒத்திவைக்கப்பட்டன.

இந்தநிலையில் 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என திமுக சார்பில் நாளை (ஜூன் 10 ஆம் தேதி) கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

இனி இப்படித்தான் உங்களை திருத்துவோம்… உதயநிதி ஸ்டாலினின் ட்வீட்!!

இந்தநிலையில் இன்று தமிழக முதலமைச்சர் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்ததையடுத்து மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனையடுத்து  மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தப்பட இருந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்தநிலையில் இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதாவது,  “காலம் கடந்து எடுக்கப்பட்ட முடிவு, ஆனாலும் 10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ளதாக எடுத்த முடிவு சிறப்பான முடிவாகும். இதனை நாங்கள் வரவேற்கிறோம்.

மாணவர்களின் நலன் கருதி ஆதரவுக் குரல் எழுப்பிய, திமுக கழக தலைவர் அவர்களுக்கும், இளைஞரணி மற்றும் மாணவர் அணியினருக்கும், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கும் கிடைத்த வெற்றியாக நாங்கள் கொண்டாடுகிறோம். இனி இப்படித்தான் உங்களை திருத்துவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

From around the web