இந்த ஊரடங்கால் கொரோனா பரவலை தடுக்க முடியவில்லை;நிரூபிக்கப்படவில்லை!

இரவு நேர ஊரடங்கு எதிராக ரத்து செய்வது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு!
 
lockdown

தற்போது நாடெங்கும் கொரோனாவின் பரவல் அதிகமாக காணப்படுகிறது. இந்த நோயானது கடந்த ஆண்டு நாட்டில் அனைத்து திசைகளிலும் பரவி இருந்தது ஆனால் கடந்த ஆண்டின் இறுதியில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இந்நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது வேதனையளிக்கிறது. இதனால் பல மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளையும், தடைகளையும் மேலும் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு ஒரு சில மாநிலங்களில் முழுநேர ஊரடங்கும் நடைமுறையில் உள்ளன.highcourt

மேலும் நம் தமிழ்நாட்டிலும் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய கட்டுப்பாடுகளும், ஊரடங்கும் விதித்தாலும் இந்த  கொரோனா  தடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கொரோனா  நாளுக்கு நாள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்து மக்களுக்கு மிகுந்த துக்கத்தை கொடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த ஊரடங்கு எதிராக வழக்கொன்று தொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது உயர் நீதிமன்றமும் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு நேர ஊரடங்கு ரத்து செய்வதற்கு கோரியது பற்றி பதிலளிக்க வேண்டும் என்பது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊரடங்கு ரத்து செய்து போக்குவரத்துக்கு அனுமதி தர கோரியது பற்றி தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம். மேலும் இந்த இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு போன்றவற்றால் கொரோனா   பரவலை தடுக்க முடியும் என நிரூபிக்கப்படவில்லை என்றும் மனுதாரர் கூறியுள்ளார். மேலும் பல மாநிலங்களில் ஊரடங்கின்போது பொது மற்றும் தனியார் போக்குவரத்து தடை செய்யப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது.

From around the web