குழந்தையும் விட்டு வைக்கல இந்த கொரோனா!மிகுந்த கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது!

கர்நாடக மாநிலம் துமுகூரு சித்தகங்கா மட விடுதியில் படித்த 30 குழந்தைக\ளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது!
 
குழந்தையும் விட்டு வைக்கல இந்த கொரோனா!மிகுந்த கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது!

தற்போது மக்களிடையே அதிகம் பேசப்படும் வார்த்தையாக மாறியுள்ளது கொரோனா. இந்தியாவில் கடந்த ஆண்டில் இறுதியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது சில வாரங்களாக கொரோனா நோயானது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் இந்தியாவில் உத்திரப் பிரதேசம் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் கொரோனா நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகப்பெரிய சோகத்தை உருவாக்கியுள்ளது.

corona

மேலும் இதற்கு எதிராக போராடும் வகையில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளன. மேலும் டெல்லியில் முழு நேர ஊரடங்கிணை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்றையதினம் அறிவித்திருக்கிறார். அதன்படி டெல்லியில் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நடைமுறையில் இருக்க உள்ளதாக தகவல் வெளியானது.  இன்றைய தினம் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த உள்ளது. மேலும் இத்தகைய கொடுமையான கொரோனா பெரியவர் சிறியவர் என்று யாரையும் பாராமல் அனைவருக்கும் வருகிறது.

30 குழந்தைகளுக்கு கொரோனா நோயானது கண்டறியப்பட்டுள்ளது மிகுந்த சோகத்தை உருவாக்கியுள்ளது. இச்சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தில் துமுகூரு சித்தகங்கா மடப்பள்ளியில் படித்து வந்த 30 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மடத்தின் விடுதியில் அவர்கள் தங்கி படித்து வரும் குழந்தைகள் என்பதும் தெளிவாகிறது. மேலும் அங்குள்ள குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ததில் இந்த முப்பது குழந்தைகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டது தெரியவந்தது. இதனால் இந்நோயானது குழந்தைகளுக்கும் பரவி குழந்தைகளையும் சோகத்தில் தள்ளியது மிகுந்த வேதனை அளிக்கிறது.

From around the web