திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் மண்டபமும் இந்தியர்களை கவர்ந்துள்ளது பிரதமர் மோடி!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்காக தமிழகத்தில் வேலைப்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதி உள்ளன. இந்த 234 தொகுதிகளிலும் பல கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். மேலும் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக மத்தியில் ஆளும் பாஜக கட்சியை வைத்துள்ளது.

அதிமுக 20 சட்டமன்ற தொகுதி ஒரு மக்களவை தொகுதியையும் பாஜகவிற்கு வழங்கியுள்ளது. மேலும் பாஜக மாநில தலைவர் முருகன் தாராபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளார். மேலும் பிரபல நடிகை குஷ்பு பாஜக சார்பில் ஆயிரம்விளக்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக வின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் பிரதமர் மோடி பெயரும் இருந்தது என்பது குறிபிடத்தக்கது. அதை தொடர்ந்து பிரதமர் மோடி சில தினங்களாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரையில் மேற்கொண்டு வருகிறார். அதன்படி தற்போது அவர் கன்யாகுமரியில் பாஜக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டிருக்கிறார்.
அவர் கூறினார், திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் மண்டபம் இந்தியர்களை கவர்ந்தது எனவும் அவர் கூறினார். மேலும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அரசாக நல்லாட்சியின் வலுவான சாதனைகளை கொண்டு வந்துள்ளோம் எனவும் மோடி பரப்புரையில் கூறினார். 50ஆண்டுகளாக யாரும் கவலைப் படாத நிலையில் பாம்பனில் புதிய பாலம் கட்ட பாஜக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது கூறினார்.
மேலும் மும்பை கன்னியாகுமரி இடையேயான பொருளாதார வளம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் மோடி கூறினார். தமிழகத்தில் சாலை பணிகளை மேற்கொள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் பிரதமர் மோடி பரப்புரையில் பேசுகையில் கூறினார்.