திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் பிரபல நடிகை!

திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா வை ஆதரித்து அக்கட்சியின் பிரபல பேச்சாளர் ஆனார் நடிகை விந்தியா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.இதன் மத்தியில் ஆளும் கட்சியான அதிமுக கட்சி கூட்டணி  பாஜக ,பாமக கட்சியையும் வைத்துள்ளது. மேலும் அதற்கான தொகுதி பங்கீடுகள் பிரிக்கப்பட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மேலும் அந்த தொகுதியில் வேட்பாளர்கள் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து கொண்டார்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி தொகுதியிலும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போடிதொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் கட்சி தரப்பில் கூறப்பட்டன.

admk

மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிக்கும் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டிக் கொண்டு வருகிறார். இதற்கு போட்டியாக தமிழகத்தில் மிகவும் வலுவாக இருக்கும் திமுக கட்சி காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி வைத்துள்ளது. மேலும் அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் ராஜன்செல்லப்பா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு மனுவை தாக்கல் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டிக் கொண்டு வந்தார்.

தற்போது அவருக்கு ஆதரவாக அதிமுகவின் பிரபல பேச்சாளருமான விந்தியா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கட்சி  அதிமுக கட்சி கூறினார்.எந்த கட்சி வந்தாலும் அதிமுக கட்சியை வீழ்த்த முடியாது எனவும் நடிகை விந்தியா தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார்.

From around the web