"உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும்": திருமாவளவன்!

வருகின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று கூறியுள்ளார் திருமாவளவன்
 
dmk vck

கடந்த சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. அதிலும் குறிப்பாக தற்போதைய ஆளும் கட்சியாக உள்ள திமுக கட்சி பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்தது. குறிப்பாக காங்கிரஸ், மதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு சில கூட்டணிகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டணி இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடன் தொடரும் என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்.thirumavalavan

மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் திட்டக்குடி மற்றும் ஒரு சில தொகுதிகளில் போட்டியிட்டது விடுதலை சிறுத்தைகள் கட்சி. மேலும் தாங்கள் போட்டியிட்ட பகுதிகளில் ஒரு சிலவற்றில் வெற்றியைப் பெற்றுள்ளது விடுதலை சிறுத்தை கட்சி. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளாட்சித் தேர்தல் பற்றி சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலிலும் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சி போட்டியிடும் என்று கூறியுள்ளார்.  கடந்த சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சி பானை சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் காரைக்குடியில் திருமாவளவன் பேட்டியளித்துள்ளார் மேலும் செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்த நாளில் சமூகநீதி உறுதிமொழியை ஏற்க இருக்கிறோம் என்று அவர் பேட்டியளித்துள்ளார்

From around the web