குஷ்புவின் அரசியல் களத்தை அமைத்துக் கொடுத்த திருமாவளவன்!

 

இந்து பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திருமாவளவனை கண்டித்து இன்று சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த குஷ்பு சென்னையிலிருந்து சென்று கொண்டு இருந்தார். ஆனால் அவர் வழியிலேயே முட்டுக்காடு என்ற பகுதியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்

இதனை அடுத்து குஷ்பு இதுகுறித்து தனது டுவிட்டரில் ’பெண்களை இழிவுபடுத்தி பேசியதற்காக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், பெண்களை இழிவுபடுத்துவது தான் திமுக காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்

மேலும் கடைசி மூச்சு இருக்கும் வரை பெண்களின் மாண்புக்காக போராடுவோம் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எனது கைதுக்காக மகிழ வேண்டாம் எங்களின் பலத்தை கண்டு தான் கைது செய்துள்ளனர் என்றும் நாங்கள் எதற்காகவும் பின்வாங்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார் 

பாஜகவில் ஏற்கனவே தமிழக அளவில்பல தலைவர்கள் இருந்தாலும் சமீபத்தில் கட்சியில் சேர்ந்த குஷ்பு தற்போது தமிழ்நாடு முழுவதும் பேசப்படும் ஒரு தலைவராக மாறி விட்டார் என்றும், அவருக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்ததே திருமாவளவன் தான் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web