10ஆம் வகுப்புக்கு சிறப்பு வகுப்பு நடத்தியதால் பள்ளிக்கு சீல்: தலைமை ஆசிரியர் மீது வழக்கு

கொரனோ வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் கடந்த சில வாரங்களாக ஒருசில தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கான சிறப்பு வகுப்புகளை நடத்துவதாக செய்திகள் வெளிவந்தது இதனை அடுத்து பள்ளி கல்வித்துறை சமீபத்தில் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்தது. அரசின் விதிமுறைகளை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தினால், பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள
 

10ஆம் வகுப்புக்கு சிறப்பு வகுப்பு நடத்தியதால் பள்ளிக்கு சீல்: தலைமை ஆசிரியர் மீது வழக்கு

கொரனோ வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் கடந்த சில வாரங்களாக ஒருசில தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கான சிறப்பு வகுப்புகளை நடத்துவதாக செய்திகள் வெளிவந்தது

இதனை அடுத்து பள்ளி கல்வித்துறை சமீபத்தில் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்தது. அரசின் விதிமுறைகளை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தினால், பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் சிறப்பு வகுப்புகள் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து அந்த பள்ளிக்கு அதிரடியாக சென்ற காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது ஒன்பதாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புக்கு செல்ல இருக்கும் மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தியதாகவும் அதில் சுமார் 25 மாணவ மாணவிகள் கலந்து கொண்டதாகவும் தெரியவந்தது

இதனை அடுத்து அரசின் விதிமுறைகளை மீறி சிறப்பு வகுப்பு நடத்தியதால் அந்த பள்ளி தலைமையாசிரியர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதுமட்டுமின்றி வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த பள்ளியை இழுத்து மூடி சீல் வைத்தனர்

அரசின் அறிவுரையை மீறி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்திய பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் திருச்செங்கோடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web