இந்தியாவில் மூன்றாவது கொரோனா தடுப்பூசி! போட்டுக்கொள்ள இந்திய அரசு அனுமதி!

ரஷ்யாவில் இருந்து அனுப்பப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசி போட்டுக்கொள்ள இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது!
 
இந்தியாவில் மூன்றாவது கொரோனா தடுப்பூசி! போட்டுக்கொள்ள இந்திய அரசு அனுமதி!

மக்கள் மத்தியில் தற்போது ஆட்கொல்லி நோயாக உள்ளது கொரோனா வைரஸ். கொரோனா கிருமியானது முதன்முதலில் அண்டை நாடான சீனாவின் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகள் அனைத்திற்கும் கொரோனா நோயானது பரவத்தொடங்கியது. மேலும் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா நோய் பரவ தொடங்கியது. இடையில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா நோயானது கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால் இந்தியாவின் சில வாரங்களாக கொரோனா நோயின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது.

covid 19

குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இந்நோயானது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாமல் மாநில அரசானது இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. மேலும் தமிழ்நாட்டிலும் இந்நோயானது அதிகரித்துள்ளது. கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை விதித்து இருந்தது .அந்த கட்டுப்பாட்டு விதிமுறைகள் பத்தாம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தமிழக அரசானது அறிவித்திருந்தது. இந்தியாவில் தற்போது இரண்டு கொரோனா தடுப்பூசிகள் நடைமுறையில் உள்ளன.

மேலும் மூன்றாவது ஒரு தடுப்பூசியும் நடைமுறை வருவதாகவும் தகவல்.  இந்த மூன்றாவது வகையான தடுப்பூசி நட்பு நாடான ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட தாகவும் தகவல். மேலும் கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் தடுப்பூசி என்றும் பெயர் உள்ளது.  தற்போது மத்திய அரசு ஆனதே இந்த தடுப்பூசியினை அவசர காலத்திற்கு பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .ஸ்புட்னிக் தடுப்பூசியும் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவில் மேலும் 5 தடுப்பூசிகள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web