தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிரடி கட்டுப்பாடுகள்; இவை இவைகள் கிடையாது!

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காண நெறிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!
 
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிரடி கட்டுப்பாடுகள்; இவை இவைகள் கிடையாது!

சில தினங்களுக்கு முன்பாக தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த மூன்று மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று உள்ளது. மேலும் அசாம் மற்றும் மேற்கு வங்கத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அந்த மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவில்லை. உதாரணமாக மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. தற்போது நாடெங்கும் கொரோனா வேகமாக பரவுவதால் அதற்கான கட்டுப்பாட்டு விதிகளையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.corona

அதன்படி 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நெறிமுறைகளையும் தற்போதைய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும் வேட்பாளர்கள் முகவர்கள் கொரோனா இல்லை என்று சான்று அளித்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்படுவர் என்றும் கூறியுள்ளது. வேட்பாளர்களின் முகவர்கள் 48 மணி நேரத்துக்கு முன்பாக கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு முன் பொதுமக்கள் கூட அனுமதி இல்லை எனவும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில்  கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

From around the web