புதுச்சேரியில் நீட் இருக்காது! புதுச்சேரி பிரச்சாரத்தில் திருச்சி சிவா!

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா புதுச்சேரியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்!
 
புதுச்சேரியில் நீட் இருக்காது! புதுச்சேரி பிரச்சாரத்தில் திருச்சி சிவா!

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளது. 234 தொகுதிகளிலும் பல கூட்டணிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து அவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில்  மட்டுமின்றி புதுச்சேரியிலும் நடைபெற உள்ளது.

dmk

புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. இந்த 30 தொகுதிகளிலும் பல கட்சிகள் தங்களது கூட்டணி வேட்பாளர்களை அறிவித்து அந்த வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மேலும் தமிழகத்தில் கூட்டணியாக உள்ள திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி புதுச்சேரியிலும் கூட்டணியோடு சட்டமன்ற தேர்தல் சந்திக்கள்ளது. இந்நிலையில் புதுச்சேரி திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மேலும் அவர் முதலியார்பேட்டை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரியில் நீட்தேர்வு இருக்காது என உத்தரவாதம் தருவதாகவும் அவர் பிரச்சாரத்தில் கூறினார்.மேலும் தமிழகத்தில் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் சென்று தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web